டிரெண்டிங்

ஓபிஎஸ் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார் : மைத்ரேயன்

ஓபிஎஸ் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார் : மைத்ரேயன்

webteam

அணிகள் இணைப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியான நேரத்தில், சரியான முடிவெடுப்பார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைவதற்கான சூழல் நிலவிவரும் நிலையில், இரு அணிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது அனைவரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். பன்னீர்செல்வம் சரியான முடிவுகளையே அறிவிப்பார். அதுவரை, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கருத்து ஏதும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.