தமிழக சட்டபேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள், வெளிநடப்பு செய்தன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழில் வணக்கம் தெரிவித்து ஆளுநர் உரையாற்ற தொடங்கினார்.அனைவருக்கும் தமிழில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். ஆளுநர் உரையின் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை பொறுமையாக இருக்குமாறு ஆளுநர் கூறினார். விவாதிக்க நிறைய நேரம் உள்ளது, அமைதியாக இருங்கள் என தெரிவித்தார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் வெளிநடப்பு செய்தனர்.