டிரெண்டிங்

கோவை அச்சகத்தை மூட எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை அச்சகத்தை மூட எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

webteam

கோவையில் உள்ள மத்திய அச்சகத்தை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் லாபத்தில் இயங்குகிற அச்சகத்தை மூடிவிட்டு, மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் அச்சகத்தை நவீனப்படுத்த முயல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருநாவுக்கரசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.