டிரெண்டிங்

எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர்: சீத்தாராம் யெச்சூரி தகவல்

எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர்: சீத்தாராம் யெச்சூரி தகவல்

webteam

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நிறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம்விசாரித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தகவலை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ஆளும் பாரதிய ஜனதா சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பதை பொறுத்து முடிவுகள் பரிசீலிக்கப்படும் என யெச்சூரி கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கூட்டம் நடந்த மறுநாள் பிரதமர் மோடியுடன் மதிய உணவு விருந்தில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியது.