டிரெண்டிங்

தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?

தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?

webteam

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்க எதிர்கட்சிகள் கோருவது ஏன் ?

=> தலைமை நீதிபதி அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறார்

=> குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு மட்டுமே முக்கியமான வழக்குகளை ஒதுக்குகிறார்

=> சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக நீதித்துறை இருக்க வேண்டும்

=> தீபக் மிஸ்ராவால் நீதித்துறையின் சுதந்திரம் இக்கட்டான் நிலைக்கு சென்றுள்ளது

=> ஜனநாயகத்தை பாதுகாப்பதாக நீதித்துறை தொடருமா என சந்தேகம் வந்து விட்டது

=> சக நீதிபதிகள் எழுப்பிய எந்த பிரச்னை குறித்தும் தலைமை நீதிபதி வாய் திறக்கவில்லை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யும் வழிமுறை

=> மக்களவையை சேர்ந்த 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையை சேர்ந்த 50 உறுப்பினர்கள் ஆதரவோடு தகுதி நீக்க தீர்மானம் கொடுக்கப்பட வேண்டும்

=> தீர்மானத்தை  ஏற்பது அல்லது நிராகரிப்பது குறித்து சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் முடிவு செய்வார்

=> தீர்மானத்தை அனுமதித்தால் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட 3 பேர் விசாரணை குழு அமைக்கப்படும்

=> விசாரணையில் நீதிபதி குற்றவாளி என கண்டறியப்பட்டால், 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் அவையில் இருந்து வாக்கெடுப்பு  மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்

=> குற்றவாளி என அறியப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தகுதி நீக்க தீர்மானம் செயலிழக்கும்.

=> தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், குடியரசு தலைவர் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்வார்

பதவி நீக்கம் சத்தியமா ?

=> 71 உறுப்பினர்கள் தீர்மானத்தை முன்மொழிந்ததால் மாநிலங்களவை தலைவரை ஏற்கச் சொல்லி அழுத்தம் தரலாம். அதிகபட்சம் ஏற்றுக் கொள்ள விடாமல் செய்யவே வாய்ப்பு அதிகம்

=> மாநிலங்களவை தலைவர் ஏற்றால் விசாரணை குழு அமைக்கப்படும்

=> குழு அமைத்து விசாரணை நடத்தினால், அதன் முடிவே அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும்

=> ஒருவேளை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலும், அது அவையில் நிறைவேறுமா ? என்பது சந்தேகம். இதற்கிடையில் தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றே விடுவார்.