அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, பிற கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக- தேமுதிக இடையிலான கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புதிதாக, புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள கிருஷ்ணசாமி, மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவித்தார்.