டிரெண்டிங்

வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த புகார்: அமமுக நிர்வாகி மேலும் ஒருவர் கைது

வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த புகார்: அமமுக நிர்வாகி மேலும் ஒருவர் கைது

Rasus

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வருமானவரித்துறை அதிகாரிகளைத் தடுத்த புகாரில் 5-ஆவதாக மேலும் ஒரு அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டிபட்டியில் அமமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கிடைத்த தகவலின் பேரில், அமமுக ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழைந்த காவலர்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளைக் கட்சி நிர்வாகிகள் தடுக்க முயன்றனர். இதனால் காவலர்கள் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அமமுக அலுவலகத்திற்குள் நேற்றிரவு 8.30 மணியளவில் சென்ற வருமான வரித்துறையினர், சுமார் 9 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். விடிய விடிய நடந்த சோதனையில் வருமான வரித்துறையினர் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு தலா 300 ரூபாய் கொடுப்பதற்கான பட்டியலுடன், கட்டு கட்டாகப் பணம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனை நடத்த வந்தபோது தடுக்க முயன்ற அமமுக நிர்வாகிகள், பழனி, சுமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோரை காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்தனர். தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேரூராட்சி அமமுக செயலாளர் பொன் முருகனையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.