தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தால் திமுகவுக்கு ஒரு நிமிடம் போதும் என்றும், கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிக்கக்கூடாது என்பதாலேயே ஆட்சியை விட்டு வைத்துள்ளதாகவும் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைக் கூறினார். மேலும், எம்.எல்.ஏக்களுக்கு மாதந்தோறும் படியளந்து ஆட்சியை முதல்வர் தக்கவை த்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
திமுக ஆட்சியின் போது அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தலாம் என கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் அதனை முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஏற்க மறுத்து ஏழை எளியோரின் நலனில் அக்கறை செலுத்தியதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.