ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்க பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஏகப்பட்ட மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஒகி புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை புரிகிறார். இதனையொட்டி, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமியும் வலியுறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.