டிரெண்டிங்

சசிகலா வரட்டும் சந்திப்போம்: ஓ.எஸ்.மணியன்

சசிகலா வரட்டும் சந்திப்போம்: ஓ.எஸ்.மணியன்

webteam

சசிகலா பரோல் பெற்று வரட்டும் பின்னர் சந்திக்கலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா பெங்களூர் பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் ம.நடராஜன் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலா பரோல் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறிய கர்நாடக சிறைத்துறை கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் மனு அளிக்குமாறு தெரிவித்தது. பிறகு சசிகலா தாக்கல் செய்த மனுவை சென்னை காவல்துறை சரிபார்த்துள்ளது. இதையடுத்து பரோல் பெற்று சசிகலா வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “சசிகலா பரோல் பெற்று வரட்டும். பின்னர் சந்திப்போம். அதிமுகவில் இருப்பது ஒரு நாள், இருநாள் பிரச்சனை அல்ல. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே பிரச்சனை இருக்கிறது. எனவே சசிகலா வருகையால் ஒரே நாளில் அது சரியாகிவிடாது.” என்றார்.