டிரெண்டிங்

தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறுவது?

தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறுவது?

webteam

தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை வேப்பேரியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், “எந்த நிலையிலும், எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற இடமில்லை. மக்களின் தீர்ப்பும் அதுதான். அத்துடன் முதலமைச்சர் அனைத்து முடிவுகளையும் தன்னிடம் ஆலோசித்து தான் அறிவிக்கிறார்” என்று கூறியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களின் பேட்டியின் போது ‘நான் பச்சை திராவிடன்’ என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Poll loading...