டிடிவி தினகரனிடம் இருந்து தனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக அமைச்சர்களிடம் இருந்து தனக்கு நேரடியாக அழைப்பு வரவில்லை என்று தெரிவித்தார். அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்தவுள்ள அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று அவர் பதிலளித்தார். இதனிடையே இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓபிஎஸ் அணி எம்பி மைத்ரேயன் மீண்டும் தெரிவித்துள்ளார்.