டிரெண்டிங்

பிரதமர் மோடியுடன் ஓ.ப‌ன்னீர்செல்வ‌ம் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஓ.ப‌ன்னீர்செல்வ‌ம் சந்திப்பு

webteam

பிரதமர் ‌நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்‌வம் டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ந‌டைபெற்‌ற இச்சந்திப்பு சுமார் அரை மணி நேரம் வரை நீடித்தது. ஓ.பன்‌னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் கதிராமங்கலம் ஓஎன்ஜிசி திட்டம் ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் எடுத்துரைத்ததாக அந்த அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ‌அதிமுகவில் நிலவி வரும் உச்சக்கட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்க உள்ளார். 

நாட்டின் முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இன்று பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து இருக்கிறார்.