டிரெண்டிங்

இனி தமிழகம் முன்னேறும்: மோடி நம்பிக்கை

இனி தமிழகம் முன்னேறும்: மோடி நம்பிக்கை

webteam

புதிதாக துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைப்பிற்குப் பிறகு துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார் - இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வருங்காலத்தில் நல்ல முன்னேற்றம் அடையும் என தான் நம்புவதாகவும் மோடி கூறியுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனவும் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.