டிரெண்டிங்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை: தம்பிதுரை

webteam

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி தமிழகத்திற்கு வந்து சேரவில்லை என அதிமுக எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி தமிழகத்திற்கு வந்து சேரவில்லை என்று கூறிய அவர், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும், 'நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது நல்லதுதான். ஒரே இந்தியா என்று சொல்லி எல்லா அதிகாரங்களையும்  மத்திய அரசே குவித்துக்கொள்வது நல்லதல்ல. அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக ஆக்க வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது பட்ஜெட் தமிழ் உட்பட அனைத்து மொழிகளில் தாக்கல் செய்ய முடியும். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஏற்கனவே செயல்படுத்திய திட்டங்களை மத்திய அரசு காலம் தாழ்த்தி கொண்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.