21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். சட்டப்பேரவை தேர்தல்தான் தம் இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார். தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிகளுக்கு, மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். இதனால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இதனிடையே அதற்கு முன் நடைபெறவிருக்கும் 21 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவாரா இல்லையா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன், தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சொல்லி இருந்தீர்கள். மாநில கட்சியா ? மத்திய கட்சியா ? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரண்டு கட்சிகளுக்கும் தான் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.