டிரெண்டிங்

‘காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும்’-பிரியங்கா காந்தி

‘காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும்’-பிரியங்கா காந்தி

EllusamyKarthik

காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸின் அடுத்த தலைவராக வர வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  தெரிவித்துள்ளார்.

2019 பொதுத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சோனியா காந்தி கடந்த 2019 ஆகஸ்டில் இடைக்காலத் தலைவரானார்.

இந்த சூழலில் தனியார் ஊடகத்துடனான பேட்டி ஒன்றில் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸின் அடுத்த தலைவராக வர வேண்டும் என தான் விரும்புவதாக பிரியங்கா காந்தி  தெரிவித்துள்ளார்.

"காந்தி குடும்பத்தினர் அல்லாதவர் கட்சியின் அடுத்த தலைவராக இருக்க வேண்டும் என்பதில் நான் ராகுலுடன் முழுமையாக உடன்படுகிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் யார், தங்களது அடுத்த தலைவராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

புதிதாக வரும் தலைவர் என்னை உத்தரப்பிரதேசத்திற்கு பதிலாக அந்தமான் நிக்கோபருக்குச் போக சொன்னாலும் போக நான் தயார்" என்று பிரியங்கா காந்தி . தெரிவித்துள்ளார்..

ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகியதில் இருந்தே நிரந்தர காங்கிரஸ் தலைவர் பதவிக்கான கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.