டிரெண்டிங்

''பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்'' : முதல்வர் பழனிசாமி

''பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்'' : முதல்வர் பழனிசாமி

webteam

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு தருவதென்றால் அது ஸ்டாலினுக்குதான் தர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி மதுரை விரகனூர், ஐராவதநல்லூர்,மேல்அனுப்பானடி,வலையங்குளம்,அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி,எம்.எல்.ஏ போஸ் மறைவால் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலை சந்திப்பதாகவும், திருப்பரங்குன்றம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் எஃகு கோட்டை என தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சில செய்தியை சொல்லி, அயோக்கியதனமான அரசு என்று மரியாதை இல்லாமல் பேசி வருகின்றார். ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை, மருத்துவர்கள் முன்னிலையில் கைரேகை பெற்று இருக்கலாம் என்ற கருத்தை மட்டுமே நீதிமன்றம் பதிவு செய்த நிலையில், ஸ்டாலின் பொய்யான தகவலை பேசுவதாகவும், பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் தர வேண்டும் என்றும் அவர் பேசினார்.