அரசை கவிழ்த்து விடலாம் என்ற பகல் கனவு பலிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார். கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணமும் நிறைவேறாது என்று குறிப்பிட்டார். கட்சியை பாதுகாக்க அனைவரும் ஓரணியில் இருப்போம் என்று தெரிவித்த அவர், அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறினார். அதேபோல், பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
விழாவில் 75 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை வழங்கினார். சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கிய இவ்விழாவில், எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 27 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.