அரசியலில் நுழையும் நோக்கம் இல்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் ரகுராம் ராஜன். ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இப்போது அமெரிக்காவில் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரை தங்கள் கட்சியில் சேருமாறு ஆம் ஆத்மி கட்சி கேட்டதாகவும் ராஜ்யசபா எம்.பி பதவி தருவதாக அக்கட்சி கூறியதாகவும் தகவல் வெளியானது.
இதுபற்றி ரகுராம் ராஜன் கூறும்போது, ’அரசியலில் நுழையும் நோக்கம் எனக்கு இல்லை. தற்போதுள்ள பேராசிரியர் பணியிலேயே தொடர விரும்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார். பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசிற்கு எதிராக ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.