டிரெண்டிங்

எனக்கும் ராகுல்தான் தலைவர்: சோனியா நெகிழ்ச்சி

எனக்கும் ராகுல்தான் தலைவர்: சோனியா நெகிழ்ச்சி

rajakannan

ராகுல் காந்தி தனக்கும் தலைவர்தான் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, குஜராத், ராஜஸ்தான் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிகளை பாராட்டினார். மேலும், ராகுல் காந்திதான் தனக்கும் தலைவர் என்றும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறினார். 

நரேந்திர மோடி தலைமையிலான அரசு குறித்து, ‘அதிகமான பப்ளிசிட்டி, குறைவான நிர்வாகம்’, ‘அதிகமான மார்க்கெட்டிங், குறைவான டெலிவரி’என்று சோனியா காந்தி விமர்சித்தார். பல்வேறு துறைகளில் ஜனநாயகத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாகவும், மத்திய அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட நிறுவனங்கள் அரசியலுக்காக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம், அதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு தலைவர்களை வலியுறுத்தியுனார்.