டிரெண்டிங்

கட்சியில் பிளவு இல்லை... ஆட்சியில் கருத்து வேறுபாடு இல்லை: தம்பிதுரை

கட்சியில் பிளவு இல்லை... ஆட்சியில் கருத்து வேறுபாடு இல்லை: தம்பிதுரை

webteam

அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை என்று அக்கட்சியின் மக்களவை உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் கூறினார். மேலும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த மாபெரும் இயக்கமான அதிமுக என்றும் பிளவுபட்டதில்லை. அனைவரும் சேர்ந்துதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்றார்.

மூன்றில் இரண்டு பங்கு வெளியே சென்றால்தான் அது பிளவு என்று கருதப்படும். ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும் தம்பிதுரை கூறினார்.