டிரெண்டிங்

எதிர்க்கட்சிகளால் ஆட்சியில் ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

எதிர்க்கட்சிகளால் ஆட்சியில் ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

webteam

மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஆட்சியில் ஒரு குறையையும் கண்டுபிடிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அரசைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஆட்சியில் ஒரு குறையையும் கண்டுபிடிக்க முடியாது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை தாம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடங்கி வைத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், யார் எங்கு சென்றாலும் அதிமுக துளிர்விட்டுக்கொண்டே இருக்கும். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.