கோவையில் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தவும், வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்ட திமுகவினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோவை ஆட்சியர் வளாகத்தில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் ஆணையர் ஜெயசந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட்டத்தைத் தொடர்ந்தால் கைது செய்வோம் என காவல்துறையினர் எச்சரித்தும் கலைந்துசெல்ல மறுத்தனர். இதையடுத்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.