டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: எளியோரை கரைசேர்க்க உதவும் தன்னார்வலர்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: எளியோரை கரைசேர்க்க உதவும் தன்னார்வலர்கள்

நிவேதா ஜெகராஜா

கொரோனா மற்றும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தத்தளிப்போருக்கு கரம் கொடுத்து வருகிறது புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை. இதன்மூலம் எளியோரை கரைசேர்க்க உதவி வருகின்றனர் பல்வேறு தன்னார்வலர்கள்.

சொந்த ஊரைவிட்டு திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்த 12 குடும்பங்கள், ரேஷன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் தவித்த நிலையில், அவர்களுக்கு விக்கி பவுண்டேஷன் என்ற அமைப்பு உதவிக்கரம் நீட்டியது. 12 குடும்பங்களுக்கும் 15 நாட்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை அந்த அமைப்பு வழங்கியது.

ஈரோடு அக்ரஹாரம் அடுத்துள்ள பூம்புகார் நகரில் உணவின்றி தவித்து வந்த வயதான தம்பதிக்கு கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் கோபிநாத், 10 நாட்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கி உதவினார்.

மயிலாடுதுறையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 12 ஏழை குடும்பங்களுக்கு தாயகம் அறக்கட்டளை நிறுவனம் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியது.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'