டிரெண்டிங்

பாஜகவுக்கு ஆதரவு அளிக்கப் போகிறேனா? - குமாரசாமி விளக்கம்

பாஜகவுக்கு ஆதரவு அளிக்கப் போகிறேனா? - குமாரசாமி விளக்கம்

rajakannan

பாஜகவுக்கு தான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அழைப்பை ஏற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். நாளை மறுநாள் எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை கர்நாடக சட்டசபையில் நிரூபிக்க உள்ளார். இதனிடைய, நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு குமாரசாமி ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பாஜகவுக்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று குமாரசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில், “மஜத எம்.எல்.ஏக்கள், கட்சி தொண்டர்கள் இதுபோன்ற வதந்திக்கு செவி சாய்க்கத் தேவையில்லை. பாஜகவுக்கு ஆதரவு என்ற தகவல் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவோம். சாமானிய மக்களுக்கான எங்களது போராட்டம் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.