பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவசர காலங்களில் முன்னெச்சரிக்கை தகவல்களை மக்களிடையே பரப்பவும் வானொலி சேவை தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், அவசர காலங்களில் முன்னெச்சரிக்கை தகவல்களை மக்களிடையே பரப்ப வானொலி சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். அதன்படி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து விடுக்கும் ஏதேனும் நோய் பரவும் அபாயம் ஏற்படும் பட்சத்தில் நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்து குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும். இதுமட்டுமின்றி மழை, புயல் போன்ற அவசர காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வும் வானொலி மூலம் தக்க சமயத்தில் வெளியிடப்படும் என்றார். இதுமட்டுமின்றி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அனைவருக்கும் ஆண்டிராய்ட் வகை கைப்பேசிகள், செயலியுடன் வழங்கப்படும் என்ற அமைச்சர் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்திற்கு 50 புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.