மூன்று ஆண்டுகளில் பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டங்களைக் கொண்டுவர, ஆசிரியர் குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வரும் திங்கள்கிழமை மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இன்னும் மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டங்களை மாற்ற ஆசிரியர் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவே வியக்கத்தக்க வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் மிஞ்சுகின்ற அளவுக்கு பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு ஏற்ற வகையில் 54 ஆயிரம் கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று பேசினார்.