டிரெண்டிங்

”என்ன சிம்ரன் இதுலாம்?” என பிரபல இ-காமர்ஸ் தளத்தால் குழம்பிப்போன நெட்டிசன்ஸ்: என்ன காரணம்?

JananiGovindhan

நவீன ரீதியாக மற்ற துறைகள் வளர்வது போல ஃபேஷன் துறையும் அதனூடே வளர்ந்து வருகிறது. புதுப்புது ட்ரெண்ட்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தாலும், முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் புணரமைக்கப்பட்டு மீண்டும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மக்களிடையேவும் நல்ல வரவேற்பும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோக வீட்டில் இருந்தபடியே செல்ஃபோன் மூலம் மிந்த்ரா, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆப்ஸ்களில் இருந்து ஏராளமானோர் ஆர்டர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஷீன் என்ற பிரபல இ-காமர்ஸ் தளம் ஒன்று 2000களின் முன்பகுதியில் மேற்கத்திய ஆடை வடிவமைப்பில் பிரபலங்கள், மாடலிங் அழகிகள் மத்தியில் அதிகளவில் பயன்பாட்டில் இருந்த crotchless chaps என்ற வகையிலான உடை ஒன்றை மீண்டும் சந்தைப்படுத்தியிருக்கிறது.

'கட் - அவுட்' முறையில் உள்ளாடைகள் தெரியும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த வகை உடைகள் ஆரம்ப காலத்திலேயே பலரது எதிர்ப்பையும் பெற்றிருந்தது. ஏனெனில் பொதுவெளியில் அணியக்கூடிய வகையில் அந்த crotchless chaps உடை இருக்காததே அதற்கு காரணமாக இருந்தது.

ஏனெனில், 2000களில் அமெரிக்க நடிகையும்-பாடகியுமான கிறிஸ்டினா அகுலேரா, ஒரு மியூசிக் வீடியோவில் crotchless chaps வகை ஆடையை அணிந்திருந்தது காண்போரை முகம் சுழிக்கச் செய்திருந்தது. இப்போது, ஷீன் அந்த வகை ஃபேஷன் ஆடையைத்தான் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்.

இது தொடர்பான ஷீன் விளம்பரத்தை கண்ட நெட்டிசன்கள் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்ததோடு, இந்த வழக்கத்திற்கு மாறான உடையை பொதுவெளியில் அணிவதில் பலர் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர், ஷீன் தளம் மீண்டும் crotchless chaps ஆடைகளை சந்தைக்கு கொண்டு வர நினைத்தது தொடர்பாக கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள்.

இருப்பினும் 1900 ரூபாய் மதிப்புள்ள இந்த crotchless chaps ஆடைக்கு பலரும் ஷீன் தளத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கும் கொடுத்திருக்கிறார்கள். சிலர் சர்ச்சைக்குள்ளான ஆடைக்கு நல்ல விதமான கமெண்ட்ஸ்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

ALSO READ: