அதிமுக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உடனடியாக உரிய உதவிகளை செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீட் விவகாரத்தில் எந்த நீதியையும் அளிக்கக்கூடாது என்பதில் பாஜக அரசு உறுதியாக இருந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருப்பதாக சாடியுள்ளார். எனவே அதிமுக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உடனடியாக உரிய உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கேரளா போவதற்கு சிறப்பு பேருந்து வசதி, ராஜாஸ்தான் மாநிலத்திற்கு போவதற்கான விமான பயணக் கட்டண வசதி மற்றும் அங்கு பெற்றோர்களுடன் தங்கி தேர்வு எழுதுவதற்கு வசதியாக தங்குமிடம் போன்றவற்றை மாணவர்களுக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடி கண்காணிப்பில் எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.