நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக 54,000 கேள்வி பதில்கள் கொண்ட சிடி தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும், பள்ளிகளில் காமராஜர் சிலை வைப்பது குறித்து அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர், ரூ.362 கோடியில் 9,10,11-ஆம் வகுப்பறைகளை கணினிமயமாக்க திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். 3,000 பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பு அமைக்க ரூ.60 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியாக எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், நீட் தேர்வை எதிர்கொள்ள வசதியாக பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.