டிரெண்டிங்

நீட்... கமல்ஹாசன் புது ட்விட்!

நீட்... கமல்ஹாசன் புது ட்விட்!

webteam

நீட் தேர்வு கமல்ஹாசன் புது ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு பிரனைகள் குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், நீட் தேர்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர். இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும் எனத் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு விவகாரத்தால் அனிதா மரணமடைந்தை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மாணவ- மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் நீட் தேர்வு குறித்து ஒரு ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.