டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: உதவி தேவைப்படுவோருக்கு கரம்கொடுத்த பேரூராட்சி தலைவர்

நிவேதா ஜெகராஜா

துளிர்க்கும் நம்பிக்கை திருக்கோவிலூர் பகுதியில், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவதியுறும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவி முருகன் வழங்கினார்.

தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலை வாய்ப்புகள் ஏதும் இன்றி தவிர்க்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கைக்கு தொலைபேசி வாயிலாக உதவிகள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியில் வசிக்கும் நசீரா மற்றும் ஓசை ஆகியோர்களுக்கு புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மற்றும் முன்னாள் பேரூராட்சித் தலைவர் தேவி முருகன் ஆகியோர் நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதனால் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக பொருட்களை பெற்றவர்கள் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இதுபோன்ற உதவி செய்யும் புதிய தலைமுறைக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவிப்பதாக முன்னாள் பேரூராட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளில் சிலவற்றுக்கு செய்யப்பட்ட உதவி இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'