டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: "300 நரிக்குறவர்களுக்கு, உணவு தேவை" - உதவிக்கரம் கோரும் குரல்

துளிர்க்கும் நம்பிக்கை: "300 நரிக்குறவர்களுக்கு, உணவு தேவை" - உதவிக்கரம் கோரும் குரல்

நிவேதா ஜெகராஜா

“பத்து வயது குழந்தை உள்ளது. கணவர் இல்லை. கடன் தொல்லை. பிள்ளைக்கு கல்வி உதவி தேவை. அத்தியாவசிய பொருட்களும் தேவை” – வனிதா, திண்டுக்கல்

“இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் ஒரு மாதத்திற்கு முன் இறந்தார். ஒரு பிள்ளைக்கு இதயத்தில் பிரச்னை. குழந்தையின், மருத்துவ உதவி தேவை. வீட்டின் சூழலை சமாளிக்க, வேலையும் தேவைப்படுகிறது” – இந்திரா, கடலூர்

“டையலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறேன். வீட்டு தேவைக்கு, மளிகை சாமான்கள் தேவை” – நடராஜன், வேலூர்

“எங்கள் பகுதியை சேர்ந்த முதியவர்கள், ஆதரவற்றவர்கள் 10 பேருக்கு உணவுப் பொருட்கள் தேவை” – அமராவதி, தேனி

“நான் அனாதை இல்லமொன்றின் செயலாளர். எங்கள் பகுதியின் நரிக்குறவர்கள் 300 பேருக்கு உணவுப் பொருட்கள் தேவை” – எலிசபெத், ரெட் ஹில்ஸ்

“நாட்டுப்புற கலைஞர்கள் 50 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவை” – தர்மராஜ், தஞ்சாவூர்

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'