டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: 6 குடும்பங்களுக்கு உதவிய 'ஐஸ்வர்யம்' தொண்டு நிறுவனம்

நிவேதா ஜெகராஜா

மதுரையில் கொரோனா முழு முடக்கத்தால் வருவாய் இழந்து தவித்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் உள்பட 6 குடும்பங்களுக்கு 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' வாயிலாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தினகரன், ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த குருசாமி, அவனியாபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சித்ரா, கூடல்புதுரை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி வாணி சாமி, மேல அனுப்பானடியை சேர்ந்த குணாளன் ஆகிய 6 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 'துளிர்க்கும் நம்பிக்கை' குழுவிடம் உதவி கோரியிருந்தனர். 

இதனையடுத்து துளிர்க்கும் நம்பிக்கையுடன் இணைந்துள்ள மதுரை ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனம் சார்பில் உதவி கோரிய ஆறு குடும்பங்களுக்கும் 2 வாரங்களுக்கு தேவையான 21 வகையான மளிகைப்பொருட்கள் கொண்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'