டிரெண்டிங்

தேர்தலை சுமூகமாக நடத்த கூடுதல் காவலர்கள் தேவை: மதுரை ஆட்சியர் கடிதம்

தேர்தலை சுமூகமாக நடத்த கூடுதல் காவலர்கள் தேவை: மதுரை ஆட்சியர் கடிதம்

Rasus

மக்களவை வாக்குப்பதிவின்போது, சித்திரைத் திருவிழாவும் நடைபெறவிருப்பதால், தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு கூடுதலாக மூவாயிரத்து 700 காவலர்கள் தேவைப்படுவதாக தமிழக டிஜிபிக்கு, மதுரை ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்துக்கு மக்களவைத் தேர்தல் இரண்டாவது கட்டத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருப்பதால், தேர்தலை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். எனினும், நிர்வாகச் சிக்கல்களை காரணம் காட்டி, தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையும், திருவிழாவையும் சுமூகமாக நடத்தும் வகையில், மதுரைக்கு மட்டும் 12 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு 12 ஆயிரம் காவலர்கள் போதாது என்றும், கூடுதலாக மூவாயிரத்து 700 காவலர்கள் இருந்தால் மட்டுமே தேர்தலையும், சித்திரை திருவிழாவையும் சுமுகமாக நடத்த முடியும் என்றும் தமிழக டிஜிபிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.