டிரெண்டிங்

நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

rajakannan

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 5 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி பங்கேற்கவில்லை.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல், அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், பாப்புலர் முத்தையா, புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி ஆகிய 5 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.