டிரெண்டிங்

500 கோடி கடனை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ ரெய்டு

500 கோடி கடனை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ ரெய்டு

webteam

ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியின் எம்பி எஸ்.பி.ஒய்.ரெட்டியின் இல்லத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியின் எம்பி எஸ்.பி.ஒய்.ரெட்டி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றிருந்தார். அதன் பிறகு இவர் தெலுங்கு தேசம் கட்சிக்கு அதரவாக செயல்பட்டு வந்தார். இவர் ஆந்திராவிலுள்ள குர்நூல் மாவட்டத்தில் நந்தி குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலம் பிவிசி பைப், சிமெண்ட் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட தொழிகளை செய்து வருகிறார். 

இந்த கம்பெனியின் பெயரில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மற்றும் சில வங்கிகளில் இவர் மொத்தமாக 500 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் இந்தக் கடன் தொகையை அவர் திரும்ப செலுத்தவில்லை. இதனையடுத்து அவரது இல்லத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது. இந்த ரெய்டில் பல முக்கிய ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. 

மேலும் சிபிஐ ரெய்டு நடைபெறும் போது எம்பி ரெட்டி வீட்டில் இல்லை. அவர் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது மருமகன் ஸ்ரீதர் ரெட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்த ரெய்டு குறித்து அவர், “சிண்டிகேட் வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் எங்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் 14ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 400கிராம் தங்க நகைகள் எடுத்து செல்லப்பட்டுள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.