டிரெண்டிங்

21ஆம் தேதி ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

21ஆம் தேதி ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

rajakannan

டெல்லியில் 21 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் முடிவுக்கு பின் மூன்றாவது அணியால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் அவர் உள்ளார். 

இதனையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். மூன்றாவது அணிக்கு சந்திரசேகர் ராவ் முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணிகள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், 21 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகான சூழலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.