டிரெண்டிங்

பிரச்சார மேடையில் நான்கு மொழிகளில் பேசி அசத்திய அதிமுக வேட்பாளர்

webteam

நாகை மக்களவைத் தொகுதி ‌அதிமுக வேட்பாளர் சரவணன் தொண்டர்கள் மத்தியில் 4 மொழிகளில் பேசி அசத்தினார். 

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு விடை சொல்லும் மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டிய பணிகளில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக‌, திமுக ஆகியவை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாகை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றி  பெற கூட்டணி கட்சியினர் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

அப்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சரவணன், நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றதும் அங்கு தொகுதி மக்களின் கோரிக்கைக்கு குரல் கொடுப்பேன் என ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் பேசி அசத்தினார்.