டிரெண்டிங்

“பீர்பால், தெனாலிராமன் போல் பாஜகவில் அண்ணாமலை இருப்பது ஒரு நகைச்சுவை” - சீமான்

“பீர்பால், தெனாலிராமன் போல் பாஜகவில் அண்ணாமலை இருப்பது ஒரு நகைச்சுவை” - சீமான்

webteam

முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை பாஜகவில் இணைந்தது ஒரு நகைச்சுவை சம்பவம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஐபிஎஸ் அண்ணாமலை பாஜகவில் இணைந்த சம்பவத்தை விமர்சித்தார். அவர்கூறுமோது, “ராஜசபை என்றால் நகைச்சுவைக்கு ஒரு ஆள் இருப்பார். பீர்பால், தெனாலிராமன் உள்ளிட்டோர் இருந்தனர். அதுபோல இது ஒரு நகைச்சுவை. அரசியல் என்றால் சில அழுத்தங்கள் இருக்கும், நெருக்கடிகள் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் நமக்கு நகைச்சுவை தேவை. அதுபோல இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு கடந்துபோக வேண்டும்” என்றார்.

அத்துடன், “7 பேர் விடுதலைக்காக தன்னுயிரை தீக்க்கிரையாக்கிய செங்கொடி நினைவுநாள் இன்று. 7 தமிழர் விடுதலையை சாத்தியப்படுத்துவதே செங்கொடியின் கனவாக இருந்தது. ஒரு தலைமுறை காலம் கடந்துவிட்ட போதும் அவர்கள் விடுதலை ஆகாததுதான் பெரும்துயர். ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் உறவுகளின் விடுதலை அடங்கியிறுப்பது என்பது துயரம் மிகுந்தது. ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து விடுதலைக்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.