டிரெண்டிங்

எனது பேச்சு வெட்டியும், ஒட்டியும் தவறாக பரப்பப்படுகிறது: ஆ.ராசா விளக்கம்

எனது பேச்சு வெட்டியும், ஒட்டியும் தவறாக பரப்பப்படுகிறது: ஆ.ராசா விளக்கம்

Veeramani

முதல்வர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. எனது பேச்சு வெட்டியும், ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்திருக்கிறார்.

முதல்வரை அவதூறாக விமர்சித்ததாக அதிமுக சார்பில், தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு விளக்கமளித்துள்ள திமுக எம்.பி ஆ.ராசா, “முதல்வர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. எனது பேச்சு வெட்டியும், ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது” என தெரிவித்திருக்கிறார்