என் கோபம் பாஜகவை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று புதியதலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “தலைமை மீது வருத்தம் இருப்பது உண்மைதான். ஆனால் கட்சி மாறப்போகிறேன் என்று வெளியாகும் செய்தி உண்மையில்லை. அண்மையில் நடைபெற்ற நிர்வாகிகள் நியமனம் வேதனை அளிக்கிறது. நம்பிக்கையோடு பாஜகவிற்கு வந்தவர்களுக்கு அங்கீகாரம் தரப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருப்பது அவசியம். அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி செல்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், “வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன்!கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தற்போது நயினார் நாகேந்திரன் புதிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும். என் கோபம் பாஜகவை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவே இதுப்போன்ற கருத்துக்களை நயினார் நாகேந்திரன் கூறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.