டிரெண்டிங்

பேரூராட்சி முடிவுகள்: பெருவாரியான இடங்களில் திமுக முன்னிலை

பேரூராட்சி முடிவுகள்: பெருவாரியான இடங்களில் திமுக முன்னிலை

JustinDurai

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 7,605 பதவிகளுக்கான இடங்களில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. காலை 11.30 மணி நிலவரப்படி, திமுக 1,892 இடங்களிலும், அதிமுக 454 இடங்களிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 415 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை முழுமையாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022