டிரெண்டிங்

””எனக்கு இந்த இடம் மட்டும் போதும்... போயிடுவேன்”- மெட்ரோ ரயிலில் மும்பைவாசியின் அட்டகாசம்!

””எனக்கு இந்த இடம் மட்டும் போதும்... போயிடுவேன்”- மெட்ரோ ரயிலில் மும்பைவாசியின் அட்டகாசம்!

JananiGovindhan

கூட்ட நெரிசல் நிறைந்த பொது போக்குவரத்துகளில் முட்டி மோதி பயணித்து விட்டால், அதை விட பெரிய சாதனை வேறு என்ன இருந்துவிட முடியும் என்ற எண்ணங்களே பெரும்பாலான மக்களுக்குள் ஏற்படக் கூடியதாக இருக்கும். குறிப்பாக மெட்ரோ நகரங்களில் அலுவலக நேரங்களில் ரயில், பேருந்துகளில் செல்வோரின் நிலைமை எப்போதும் திண்டாட்டம்தான்.

வீட்டில் இருந்து நன்றாக தயாராகி அலுவலகம் செல்ல டிரெயின், பஸ்ஸில் சென்றால் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகிவிடும். அப்படியான வீடியோ ஒன்றுதான் ட்விட்டர் பக்கத்தில் பகிரபட்டு லட்சக் கணக்கானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் புறநகர் ரயிலை காட்டிலும் விரைவில் சென்றடைந்துவிடுவதால் மெட்ரோ ரயிலையே மக்கள் நம்பியிருக்கிறார்கள். இதனால் நெரிசலில் சிக்கினாலும் பரவாயில்லை என்று மெட்ரோ ரயிலில் செல்வோரே ஏராளமாக இருக்கிறார்கள்.

அதன்படி மும்பை மெட்ரோ ரயிலில் கால் கூட வைக்க முடியாத வகையில் மூச்சை அடக்கும் அளவுக்கான கூட்டத்துக்குள் டிப் டாப்பாக இருந்த நபர் ஒருவர் அலுவலகம் சென்றால் போதும் என்ற நினைப்பில் ரயிலுக்குள் ஏறி விடுகிறார். ஆனால் இடப்பற்றாக்குறையால் வேறு வழியின்றி லேசாக எல்லாரையும் அழுத்திவிட்டு கதவின் நுணியில் ஒட்டியபடி ரயிலில் ஏறி சென்றிருக்கிறார்.

இந்த நிகழ்வு தொடர்பான வீடியோதான் roads of mumbai என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அவர் மேற்கொண்ட அந்த செயல் நெட்டிசன்களை திகைக்க வைத்ததோடு தினசரி பயணிகளிடையே நடக்கும் நிகழ்வை தொடர்பு படுத்திக்கொள்ளும் vibe-ஐ கொடுப்பதாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.