டிரெண்டிங்

மக்களிடம் மனுக்களை பெற்று ஆளுநர் யாருக்கு அனுப்புவார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மக்களிடம் மனுக்களை பெற்று ஆளுநர் யாருக்கு அனுப்புவார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Rasus

மக்களிடம் மனுக்களை பெற்று அதனை ஆளுநர் யாருக்கு அனுப்புவார் என திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநரிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் மூலம் மக்களின் குறைகளை ஆளுநர் குறிப்பெடுத்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருப்புக்கொடி பேரணி நடத்தியது.

இந்நிலையில் மக்களிடம் மனுக்களை பெற்று அதனை ஆளுநர் யாருக்கு அனுப்புவார் என திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழகம் மாநில சுயாட்சி வேண்டுகிற மாநிலம். ஆனால் மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் தன்னுடைய பணிகளை செய்யாமல், அமைச்சர் முதலமைச்சர் செய்கின்ற பணிகளை செய்து வருகிறார். இது உரிமை மீறுகின்ற செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு ஆளுநர் இதுவரை உத்தரவிடவில்லை ” என தெரிவித்தார்.