டிரெண்டிங்

ஜெயலலிதா வீட்டில் சோதனை... களங்கத்தை துடைக்கும்: தினகரனுக்கு அன்வர் ராஜா பதில்

ஜெயலலிதா வீட்டில் சோதனை... களங்கத்தை துடைக்கும்: தினகரனுக்கு அன்வர் ராஜா பதில்

webteam

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் நடந்த சோதனை அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தாது, களங்கத்தை துடைக்கும் என தினகரனுக்கு எம்.பி அன்வர் ராஜா பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் வீடு தொண்டர்களுக்கு கோயில். ஜெயலலிதாவின் அறை எங்களுக்கு கர்ப்பகிரகம் மாதிரி. அந்த அறைக்கு யாரும் தேவையில்லமால் செல்லமாட்டோம். அங்கு யாரும் செல்வதை பொதுச்செயலளார் சசிகலா அனுமதிக்க மாட்டார். ஆனால் அங்கு ஏதோ வைத்திருப்பார்கள் என்று வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்” என்று கூறியிருந்தார். அத்துடன் இந்த சோதனை ஜெயலலிதாவிற்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு பதிலளிக்கும் வகையில் மதுரையில் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியின் எம்.பி.யான அன்வர் ராஜா, “சோதனையால் களங்கம் ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்த சோதனையால் களங்கம் துடைக்கப்படும் என்று தான் நான் நினைக்கின்றேன். அவ்வாறு ஜெயலலிதாவின் அறையில் ஏதேனும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை எல்லாம் வெளியேற்றி அந்த அறை சுத்தப்படுத்தப்படும் என்பது தான் எனது கருத்து” என்று கூறினார்.