டிரெண்டிங்

தனிநபர் விமர்சனம் செய்கிறார் மோடி- சித்தராமையா

தனிநபர் விமர்சனம் செய்கிறார் மோடி- சித்தராமையா

webteam

பிரதமர் மோடி மிகவும் தரம் தாழ்ந்து பேசுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். 

கர்நாடகா மாநிலத்தில் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, பிரதமர் பதவியில் இருப்பவரிடம் இருந்து கவுரவமிக்க வார்த்தைகளை எதிர்பார்ப்பதாகவும், ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் மொழியில் பிரதமர் தனிநபர் விமர்சனம் செய்வதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் தனது அரசின் சாதனைகளையும், கர்நாடக அரசின் தவறுகளை விமர்சித்தும் பேசலாமே தவிர தனிநபர் விமர்சனம் செய்வது சரியல்ல என்றும் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் அரசு சித்த ரூபய்யா அரசு என்று முதலமைச்சரின் பெயரை மாற்றி பேசியிருந்த நிலையில், அதற்கு சித்தராமைய்யா பதிலளித்துள்ளார்.