டிரெண்டிங்

“மோடிக்கு வயதாகி விட்டது” - திருநாவுக்கரசர் விமர்சனம்

“மோடிக்கு வயதாகி விட்டது” - திருநாவுக்கரசர் விமர்சனம்

webteam

ராகுல் காந்திக்கு இன்னும் வயதாகவில்லை என்றும் அவர் பிரதமரானாலும் ஆகவில்லை என்றாலும் கவலை இல்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைப்பெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ராகுல் காந்தி பிரதமரானாலும் ஆகவில்லை என்றாலும் கவலை இல்லை எனத் தெரிவித்தார். மேலும் ராகுல் காந்திக்கு இன்னும் வயதாகவில்லை எனவும் மோடிக்குதான் வயதாகி விட்டது என்றும் கூறினார். மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியை மோடி  விமர்சனம் செய்தது மிகவும் கீழ்த்தரமான செயல், அது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தவர், பாஜகவைப் பொறுத்தவரை வாஜ்பாய் தோற்றவுடன் அவரை மாற்றிவிட்டார்கள், அத்வானி தோற்றவுடன் அவரை மாற்றிவிட்டார்கள், அதுபோல மோடி தோற்றவுடன் அவரை மாற்றி விடுவார்கள் என்றார். 

கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜூவ்காந்தி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், தீவிரவாதிகளால் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.