டிரெண்டிங்

மிதமான வெப்பம் கலந்த சூழ்நிலை... கொடைக்கானலுக்கு படையெடுக்கும் அரிய வகை பறவைகள்...

kaleelrahman

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காணப்படும் அரிய வகை மரங்கொத்தி பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரத் தொடங்கியுள்ளன.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யத் துவங்கியுள்ளதால், இம்மலைத்தொடர் வரிசையில், கிழக்கு நோக்கி நீண்டுள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு, அரிய வகை பறவைகள் வரத் துவங்கியுள்ளன.


தென் மேற்கு பருவமழை காலகட்டத்தில், கிழக்கு நோக்கி நீண்டுள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில், மிதமான வெப்பம் கலந்த காலநிலை நிலவுவதால், இது பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான காலகட்டம் எனக் கூறப்படுகிறது.


இதனால் இக்காலகட்டத்தில் மரங்கொத்திகள் வரத் துவங்கியுள்ளதாகவும், இவைகள் சில மாதங்கள் இங்கு தங்கி கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்கும் எனவும் பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.